60 ஏப்ரல் – 29

 

சர்வதேச நடன தினம்

(International Dance Day)

சர்வதேச நடனக் கமிட்டி, யுனெஸ்கோ மற்றும் சர்வதேச திரையரங்க நிறுவனம் ஆகியவை இணைந்து இத்தினத்தை 1982ஆம் ஆண்டுமுதல் ஏப்ரல் 29 அன்று கொண்டாடுகிறது. ஏப்ரல் 29 அன்றுதான் ஜூன் ஜார்ஜ்ஸ் நோவீர் (Jean – Georges Noverre) என்ற நடனக் கலைஞர் பிறந்த நாளாகும். நடனத்தின் மூலம் பாலியல் வேறுபாட்டைப் போக்கி சமத்துவத்தைக் கொடுக்கலாம் என யுனெஸ்கோ தெரிவிக்கிறது.



 

இரசாயன ஆயுதங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலக தினம்

(World Day of Remembrance for all Victims of Chemical Warface)

இரசாயண ஆயுதங்களை பயன்படுத்துதல் என்பது மனித குலத்திற்கு எதிரான ஒரு வருந்தத்தக்க குற்றம் என இரசாயன ஆயுதங்கள் தடை அமைப்பு கூறுகிறது. சிரியா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதால் பலர் உயிர் இழந்தனர். இரசாயன ஆயுதங்களால் உயிர் இழந்தவர்களை நினைவு கூறுவதற்காக 1997இல் இருந்து இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

License

உலகில் கொண்டாடப்படும் சிறப்பு தினங்கள் Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.