105 ஜூலை – 20

 

மனிதன் நிலவில் இறங்கிய நாள்

(Moon Landing Day)

அமெரிக்காவிலிருந்து அப்பலோ 11 என்கிற விண்கலம் நிலாவில் 1969ஆம் ஆண்டு ஜூலை 20 அன்று தரை இறங்கியது. முதன்முதலாக நீல் ஆர்ம்ஸ்ட்ராங் ஜூலை 21 அன்று அதிகாலை 2.56 மணிக்கு நிலவில் தனது காலை பதித்தார். மனித குல வரலாற்றில் இது மிகப்பெரிய சாதனையாகும். இவரைத் தொடர்ந்து 19 நிமிடங்கள் கழித்து ஆல்டிரின் என்பவரும் நிலவில் கால் பதித்தார்.



 

கிரிகோர் மெண்டல் பிறந்த தினம்

(Gregor Mendel Birth Day)

கிரிகோர் மெண்டல் 1822ஆம் ஆண்டு ஜூலை 20 அன்று ஆஸ்திரிய நாட்டில் பிறந்தார். இவரை மரபியலின் தந்தை என்று அழைக்கிறார்கள். மரபுப்பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டே ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு எப்படி கடத்தப்படுகிறது என்பதைக் கண்டறிந்தார். பிற்காலத்தில் இவ்விதிகள் மெண்டலின் விதிகள் எனப் பெயரிடப்பட்டன.



 

சர்வதேச சதுரங்க நாள்

(International Chess Day)

உலகச் சதுரங்கக் கூட்டமைப்பு 1924ஆம் ஆண்டு ஜூலை 20 இல் பாரிஸ் நகரில் நிறுவப்பட்டது. இது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனம். இதன் குறிக்கோள் நாம் அனைவரும் ஒரே மக்கள் என்பதாகும். தற்போது இந்நிறுவனத்தில் 150க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இக்கூட்டமைப்பு ஜூலை 20 ஆம் நாளை சர்வதேச சதுரங்க நாளாக 1966ஆம் ஆண்டில் அறிவித்தது.

License

உலகில் கொண்டாடப்படும் சிறப்பு தினங்கள் Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published.